இந்தத் தளத்தில் ஆண்டவர், விசுவாசம், இயேசு, ஜீவன் மற்றும் இன்னும் பல காரியங்களைப் பற்றி போதிக்கும் பாடங்களை நீங்கள் காணலாம். பாடங்கள் உங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
தற்போது நாங்கள் கற்பிக்கும் பெரும்பாலான பாடங்களில், நீங்கள் தனிப்பட்ட முறையில் பயிற்சியாளரால் கண்காணிக்கப்படுகிறீர்கள். பாடம் தொடர்பான உங்கள் பதில்கள், கருத்துகள் மற்றும் கேள்விகளுக்கு ஆன்லைன் பயிற்சியாளர் ஒருவர் உங்களுக்குப் பதிலளிக்கிறார். பாடம் படித்து முடிக்கும்வரையிலும் நீங்கள் இந்தப் பயிற்சியாளருடன் தொடர்பில் இருக்கிறீர்கள்.
பயிற்சியாளருடன் உங்களை இணைப்பது தானாகவே நடைபெறாது. உங்களுக்கு ஏற்ற பயிற்சியாளரை நாங்கள் தேடுகிறோம். நிச்சயமாக, பயிற்சியாளருக்கும் நீங்கள் ஏற்ற நபராக இருப்பதை உறுதிப்படுத்துவோம்.
பாடத்திட்டங்கள் பல பாடங்களைக் கொண்டிருக்கின்றன. இவை உரை, படங்கள் மற்றும் வீடியோக்களை உள்ளடக்கியுள்ளன. சில பாடங்கள் உங்களைப் பதிலளிக்கும்படி அல்லது வீட்டுப்பாடங்களைச் செய்யும்படி கேட்கின்றன. கேள்விகள் மூலம், பாடத்திட்டம் நடைமுறைப்படுகிறது.
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்திருந்தால், அதற்கான பதிலை அனுப்ப பயிற்சியாளருக்கு செய்தி அனுப்பப்படும். உங்கள் பதில்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில் உங்களுக்கு மட்டும் தனிப்பட்ட விதத்தில் அனுப்பப்படும். நல்லது தானே? ஏனென்றால் உங்களுக்கு பயிற்சியாளர் இருப்பாரானால், பதில்கள் தானாக அனுப்பப்படாது! பயிற்சியாளர் துரிதமாக உங்களுக்குப் பதிலளிக்க முற்படுவார். ஒருசில நாட்களிலேயே உங்களுக்கு பதில் கிடைத்துவிடும்!
பொறுப்பேற்றுள்ள கூட்டாளியுடன் பகிர்ந்துகொள்ளத்தக்க (கவனி-நடைமுறைப்படுத்து-பகிர்) பாடங்களும் உள்ளன. அந்தப் பாடங்களில், பகீர் என்ற அமைப்பில், உங்கள் கேள்விக்கான பதிலை உங்கள் பொறுப்பாளியான கூட்டாளருடன் பகிர்ந்துகொள்வதை நீங்கள் தேர்வுசெய்யலாம். பொறுப்பாளியான கூட்டாளி என்பவர் நீங்கள் சொந்தமாகத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு நபர் ஆவார். பாடத்தைப் படித்து முடிக்க உங்களுக்கு உதவக்கூடிய ஒருவருடன் சேர்ந்து இந்தப் பாடத்தைப் படிக்குமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். இது உங்களுக்கு உதவியாய் இருக்கும் என்று நாங்கள் நம்புவதால், இதைக் கூடுதலாக சேர்த்துள்ளோம்.
கவனி
ஒரு திரைப்படத்தின் சிறிய பகுதி அல்லது சிறு உரையிலிருந்து ஒரு சிறிய கிளிப்பைப் பார்த்தபின் ஒவ்வொரு பாடத்தையும் தொடங்குகிறீர்கள். கிளிப்பைப் பார்த்த பிறகு அல்லது உரையைப் படித்த பிறகு, அதன் கீழே ஒரு கருத்தை இடுகையிடலாம். உங்கள் கருத்தை அந்தப் பாடத்திட்டத்தில் பங்கேற்பவர்கள் பார்க்க முடியும், எனவே மற்றவர்களின் கருத்தையும் பதிலையும் நீங்கள் பார்க்கலாம்.
நடைமுறைப்படுத்து
அடுத்த பகுதி நடைமுறைப்படுத்து-அமைப்பு. இந்தப் பகுதி வேத வாக்கியத்துடன் தொடங்குகிறது. வேதாகமம் ஒரு பழைய புத்தகமாகத் தோன்றலாம், ஆனால் இன்று நமக்குச் சொல்ல வேண்டிய நிறைய விஷயங்கள் அதில் உள்ளது. திரைப்படப் பகுதி, உரை மற்றும் வேத வசனங்களிலிருந்து பாடங்களைப் புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு உதவ, நடைமுறைப்படுத்து அமைப்பு சில கேள்விகளை எழுப்புகிறது. இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இரகசியமானவை மற்றும் உங்கள் பொறுப்பாளியான கூட்டாளியுடன் பகிர்ந்துகொள்ளப்படாது.
பகிர்
பாடத்தின் கடைசி பகுதியில், நீங்கள் கற்றுக்கொண்டதை உங்கள் பொறுப்பாளியான கூட்டாளியுடன் பகிர்ந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்தப் பொறுப்பாளியான கூட்டாளி உங்களது பதில்களைப் பகிர நீங்கள் தேர்ந்தெடுத்த ஒருவர் ஆவார். அவசியம் இல்லை என்றாலும், படிப்பிற்கு மதிப்பு சேர்க்கும் வண்ணம் பகிர் விருப்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.
மேலே உள்ள மூன்று படிகளையும் (கவனி, நடைமுறைப்படுத்து மற்றும் பகிர்) செய்துமுடித்து ஒரு நாள் கழித்து, அடுத்த பாடத்தைத் தொடரலாம். அடுத்த பாடத்திற்குச் செல்லும்போது மின்னஞ்சல் மூலம் அறிவிப்பைப் பெறுவீர்கள்.
ஒன்றும் புரியவில்லையா? உங்கள் பயிற்சியாளரிடம் கேள்வி கேட்கவும். அல்லது தொடர்பு படிவம் வாயிலாக தொடர்புகொள்ளவும்- contact form.